சிறு கதைகள் மட்டும்

Sunday, February 12, 2006

ஜன்னலுக்கு வெளியெ ஒரு சரணாலயம்.

பெங்களூர் நகரத்தின் இதயப்பகுதியிலிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு குடியிருப்பு பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு சிறிய வீட்டில் நான் குடியிருந்தேன்.
குழந்தை பிறப்பிற்காக என் மணைவி அவளின் தாய் வீட்டில் இருந்த சமயம் அது. காலையில் எழுந்தவுடன் அவசரமாக கிளம்பி அலுவலகத்திலெயெ மூன்று வேலையும் சாப்பிட்டுவிட்டு பறவைகள் கூடு திரும்புவது போள் தூங்குவதற்கு மட்டும் வீடு வருவதுமாக , இதே சுழர்ச்சியில் (நகர) வாழ்கை இயந்திரதனமாக இருந்தது. இப்படியான வாழ்கையில் படுக்கை அறையில் இருந்த ஜன்னலை திறப்பதற்கு நேரமும் தேவையும், ஐந்து மாத குழந்தையாக நந்தா வீட்டிற்கு வரும் வரை இருக்கவில்லை.
மற்ற குழந்தைகளை போலவே நந்தாவும் வீட்டிற்கு வெளியே இருக்கும் உலகத்தை பார்பதில் அதிக ஆற்வம் காட்டியதாலும், காற்றோட்டத்திற்காகவும் என் மனைவி பகல் வேளைகளில் ஜன்னலை திறந்து வைக்கலானால். ஜன்னலை ஒட்டியெ கட்டிலும் போடப்பட்டிருந்ததாள் , நந்தாவை கட்டிலில் அமர்த்தி ஜன்னலின் வழியே வேடிக்கை காட்டுவது மிகவும் வசதியாக இருந்தது.
ஓரு விடுமுறை நாள் காலையில் என் மணைவி என்னையும் நந்தாவையும் ஜன்னலின் முன்பு அமர்த்தி விட்டு வீட்டு வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.அப்போது தான் நான் அந்த ஜன்னலுக்கு வெளியே இருந்த உலகத்தை சரியாக பார்த்தேன். ஜன்னலுக்கு கீழே சிறிய சாலையும் , சாலைக்கு மறுபுறம் உயரமான சுவர் வைத்து பாதுகாக்கபட்டிருந்த ஓரு காலி மனை நிலமும், அந்த சுவருக்கு பின்னால் எனக்கு பெயர் தெரியாத ஒரு மரம் இருந்தது. தவிர சுவற்றின் முடிவில் சில வீடுகலும் இருந்தன.
நந்தாவின் பார்வை சலையில் செல்லும் மனிதர்கள், வாகனங்கள் மேல் அவ்வப்போது இருந்தாலும் அதிகமாக அந்த சுவற்றின் பின்னால் இருந்த மரத்தின் மேல் தான் இருந்தது. அதன் பின்பு தான் நான் அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன். காகங்கள், மைனாக்கள் மற்றும் அணில்கள் அந்த மரத்தின் இளந்தை பழத்தை விட சற்று சிறிதாக இருந்த சிவப்பு பழங்களை மும்முரமாக தேடி கடித்துக்கொண்டிருந்தன. எனக்கு அது நகரத்தின் நடுவே ஒரு சிறிய பறவைகள் சரணாலயம் போல் தோன்றியது.
அந்த மரத்தில் காக்கைகள் அதிகமாக இருந்ததால் என் மனைவி நந்தாவிற்கு காக்கைகளை நன்றாக அடையளம் காட்டியிருந்தாள். ஆனால் நந்தாவிற்கு எல்லா பறவைகளுமே "காக்கா" தான், அவன் அடிக்கடி "காக்கா , காக்கா " என்று கூறிக்கொண்டிருந்தான் . அவனுடைய அகராதியில் அம்மா, அப்பா , ஆத்தா , டாடாவிற்கு பிறகு "காக்கா" முக்கியமான சொல் ஆகிவிட்டிருந்தது.
மறு நாளில் இருந்து நந்தா இல்லாத சமயங்களிள் கூட நான் அந்த மரத்தை என்னை அறியாமல் கவணிக்க ஆரம்பித்துவிட்டேன். காற்றே சிரமப்பட்டு சுழழும் நகர நெரிசலில் உயிர் துடிப்புள்ள இது போன்ற காட்சியை காண்பதே அறிதாக இருந்தது. பசுமையான அடர்ந்த மரத்தின் அழகும் அதில் சுருசுருப்பாக இயங்கும் பறவைகளையும் பார்கையில் மனதிர்க்கு அமைதியும் புத்துண்ர்சியும் ஏற்பட்டது. உண்மையில் ஆர்வத்தை அதிகப்படித்தியது அந்த மரத்திற்கு சமயங்களில் வந்து போகும் விருந்தினர்கல் தான். ஒரு நாள், உடல் முழுவதும் பச்சை நிறத்தில் காக்கையை ஒத்த பறவை ஒன்றை பார்க்க முடிந்தது . நங்கள் அதுவரை பார்த்திராத பறவை என்பதால் அது மரத்தை விட்டு செல்லும் வரை குடும்பத்துடன் வேடிக்கை பார்த்தோம், அது என்ன பறவையாக இருக்கும் என்ற சிந்தனையுடன் . இதேபோல் தேன் சிட்டுக்கள் மற்றும் நாங்கள் பார்த்திராத பல பறவைகளை அந்த மரத்தில் பார்க்க முடிந்தது.
இது தவிர, எந்த நேரமும் அணில்கல் விளையாடிக்கொண்டிருக்கும். பாலைவனத்தின் நடுவில் பசுமையை போல நகரத்தின் நடுவெ சோலையாய் இருந்தது அந்த மரம். பெங்களூர் நகரத்தில் மரங்கள் இன்னும் அறிதாகவில்லை என்றாலும் இது போன்ற பறவைகள் குடியிருக்கும் பழ மரங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அந்த மரத்தின் புண்ணியத்தால் தினமும் காலையில் குயில்களின் ஓசையை கேட்டுக்கொண்டே தூக்கம் கலைய முடிந்தது. சற்று வசதி குறைவான வீடாக இருந்த போதிலும் இந்த மரத்திற்காகவும் பறவைகளுக்காகவும் அந்த வீட்டிலேயே இன்னும் கொஞ்ச காலம் இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.
நந்தா சாப்பிடுவதற்கும், அழுகை நிறுத்துவதற்கும் "காக்கா" மிகவும் முக்கியம். எல்லா பறவைகளும் மரத்தின் மறுபுரம் போய் விடும் சமயங்களில் பாடு திண்டாட்டம் தான், "காகா" தேடி வீட்டிற்கு வெளியெ வருவதும் , "காக்கா" இல்லத பட்சத்தில் "டாகி"யொ (நாய்) மாடோ எங்களை காப்பாற்றுவதும் வாடிக்கை.

ஒரு நாள் காலையில் ஜன்னலுக்கு வெளியெ கற்கலை வண்டியில் இருந்து கொட்டுவது போல் சத்தம் கேட்டது,
அலுவலகத்திற்கு செல்லும் அவசரம் இருந்தும் என்ன சத்தம் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தால் ஜன்னலை திறந்து பார்த்தபோது, மரம் இருந்த மனை நிலத்தின் முன்பு லாரியில் இருந்து வீடு கட்ட பயன்படுத்தும் கற்கல் கொட்டப்பட்டிருந்தது. எதற்கு இங்கே கொட்டி இருக்கிறார்கள் என்ற யோசனையுடன் அலுவலகத்திற்கு சென்று விட்டேன்.
மாலையில் வீடு வந்ததும் முதல் வேலையாக ஜன்னலை திறந்து பார்த்தேன், கண் முன்பாக இருந்த வெறுமை மனதை என்னமொ செய்தது. மரம் இல்லாத அந்த காட்சியை தொடர்ந்து பார்க்க முடியாமல் ஜன்னலை மூடி விட்டு கணத்த மனதுடன் திரும்பினேன். என் எண்ணத்தை புரிந்து கொண்ட என் மனைவி
" அந்த காலி மனையில் வீடு கட்டுவதற்காக மரத்தை வெட்டி விட்டார்கள்" என்றாள்.
அதே சமயம் நந்தா ஜன்னலை கை காட்டி திறக்க சொல்லி அடம் பிடித்தான், அவனை சமாதானம் செய்வதற்காக வேறு வழி இல்லாமல் அவனை ஜன்னலருகே நிறுத்தி வைத்து ஜன்னலை மறுபடியும் திறந்தேன் . நந்தா ஜன்னலுக்கு வெளியெ கைகளை நீட்டிக்கொண்டு "காகா இல்ல, காகா இல்ல " என்று மழலையாய் சொன்னான். மரமும் பறவைகளும் இல்லாத ஏமாற்றத்தை அவனும் உண்ர்கிறான் என்று அறிந்த போது மனம் இன்னும் அதிகமாக வலித்தது. அவனை திசை திருப்புவதற்காக சாலையில் சென்ற ஒரு வாகணத்தை காட்டி "வண்டி போகுது பாரு" என்றேன்.
மனித வழற்ச்சிக்காக ஜன்னலுக்கு வெளியெ இருந்த சரணாலயம் அழிந்து போனதை அவனுக்கு புரியவைக்க முடியாது. என் மனைவியிடம் "சீக்கிரம் வேறு நல்ல வீடு பார்க்க வேண்டும்" என்றவாறு நந்தாவை எடுத்துக்கொண்டு ஜன்னலை விட்டு நகர்ந்தேன்.

0 Comments:

Post a Comment

<< Home